Sat. Dec 21st, 2024

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த | ரவுடி கைது |

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த | ரவுடி கைது |

ஜூலை , 10 , 2019
சென்னை அரும்பாக்கம் வைஷ்ணவி கல்லூரி எதிரில், ரவுடியை சரமாரியாக வெட்டிய வழக்கில், தலைமறைவான ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை அரும்பாக்கம் வைஷ்ணவி கல்லூரி அருகே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கஞ்சா வியாபாரியும் ரவுடியான குமரேசன், என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி அன்று, பத்து பேர் கொண்ட கும்பலால், வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுவரையில் இந்த வழக்கு தொடர்பாக 9- பேரை அரும்பாக்கம் காவல் துறையினர் கைது செய்தனர். இதில் சூளைமேட்டை சேர்ந்த மாவா வெங்கடேசன், மட்டும் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், தற்போது கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள அவரது மகள் இல்லத்தில் வைத்து அரும்பாக்கம் போலீசார் மாவா வெங்கடேசனை கைது செய்தனர் பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்…

-நமது நிருபர்