நடந்து சென்றவரிடம் செயின் பறிப்பு | சிசிடிவி உதவியுடன் தேடும் போலீசார் |
நடந்து சென்றவரிடம் செயின் பறிப்பு | சிசிடிவி உதவியுடன் தேடும் போலீசார் |
ஜூலை, 10 ,2019
சென்னை கே.கே.நகர், 23வது செக்டார் 6-வது தெருவில், வசித்து வருபவர் லதா. அதே பகுதியில், நேற்று இரவு நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, அவரை பின் தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர், அவர் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
அப்போது பறிக்கப்பட்ட செயினில் பாதி திருடனிடமும், மீதமுள்ள பகுதி லதாவிடமும் சிக்கிக் கொண்டது. உடனடியாக கேகே.நகர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட லதா அளித்த புகாரின் பேரில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, கேகே.நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்…
-நமது நிருபர்