ஆந்திராவில் இருந்து 7-கிலோ கஞ்சா கடத்தல் | ஒருவர் கைது |
ஜூலை 10-2019
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த தீமுது வயது 36. இவர் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி கொண்டு பேருந்து மூலம் இன்று அதிகாலை 1:30 மணி அளவில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் நாலாவது நடைமேடையில் சேலம் செல்வதற்காக அமர்ந்து கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக ரோந்து வந்த கோயம்பேடு போலீசார்.. ஒரு கைப்பையும் மற்றும் டிராவல் பேக் வைத்துக் கொண்டு இருந்த வாலிபரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்யும்போது முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், கோயம்பேடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவனிடம் ஆந்திராவில் இருந்து கொண்டு வந்த 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
நமது நிருபர்.