Sat. Dec 21st, 2024

முதியவரிடம் பணம், செல்போன் பறிப்பு | இரண்டு வாலிபர்கள் கைது |

ஜூலை 10-2019

சென்னை கோயம்பேட்டில் சாலையில் நடந்து சென்ற முதியவரை தாக்கி, செல்போன் மற்றும் பணம் பறித்த இரு வாலிபர்கள் கைது. செல்போன் மற்றும் பைக் பறிமுதல்.

சென்னை மதுரவாயல் அடுத்த நிற்கின்றோம் சேர்ந்தவர் சைலேஷ்வரன் வயது 70 இவர் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு கோயம்பேடு வழியாக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சர்வேஸ்வரனை சரமாரியாக தாக்கி விட்டு அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.3300 பணத்தை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து சைலேஷ்வரன் கோயம்பேடு போலீஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து கோயம்பேடு போலீசார் மர்மநபர்களை தேடி வந்தார். இதில் சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த பிரகாஷ் வயது 20, சென்னை பாடி குப்பத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் வயது 22 ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை செய்தபோது வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

நமது நிருபர்