இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்த சிறுவன் | சாலை தடுப்பில் மோதி பலி |
ஜூலை 07-2019..,
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தாமோதரன் (15) தந்தை பெயர் டேனியல் இவர் வில்லிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் என்பவரது மகன் விக்னேஷ் (17) இவர் தனது மோட்டார் சைக்கிளில் சிறுவன் தாமோதரனை தனது பைக்கில் அழைத்துக் கொண்டு நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது. நீலங்கரை பகுதியான வெட்டுவாங்கேணி பஸ் நிறுத்தம் அருகே சாலையில் நிலை தடுமாறி, அங்கிருக்கும் தடுப்பில் மோதியதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
உடனே அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் சென்று பார்த்தபோது தாமோதரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர்யிழந்த நிலையில் கிடந்தார் விக்னேஷை படுகாயங்களுடன் இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அடையாறு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்…
-நமது நிருபர்