Sun. Oct 6th, 2024

பழங்குடியினர் ஆணையத்தின் சார்பில் | பழங்குடியினர் நலன் குறித்த ஆலோசணைக் கூட்டம்

பழங்குடியினர் ஆணையத்தின் சார்பில் | பழங்குடியினர் நலன் குறித்த ஆலோசணைக் கூட்டம்

ஜூலை. 5. 2019

தேசிய பழங்குடியினர் ஆணையம் சார்பில்,சென்னை தலைமைச் செயலகத்தில், பழங்குடியினர் நலன் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

துறை சார்ந்த அதிகாரிகள், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஆலோசணைக் கூட்டம் முடிந்த பின்,தேசிய பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர்,நந்தகுமார் சாய்,செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

வேலூர் மாவட்டத்தின் மலை கிராம மக்களுக்கு,மின்சாரம்,கல்வி குடிநீர்,சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது குறித்தும், ஏலகிரி மலை,கல்வராயன் மலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கு, சந்தன மரங்களை வளர்ப்பது குறித்து பயிற்சியளிப்பதன் மூலம் அவர்களின் தொழில் வளத்தை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டது.

சமூக ஆர்வலர்கள்  மூலம், மலைப்பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டு, வேலூர் பகுதி கிராம மக்களுக்கு கல்வி வழங்கும் திட்டத்தை மேம்படுத்த உள்ளதாகவும்,இதுபோன்ற பள்ளிகள் திறக்கும் சமூக ஆர்வலருக்கு அரசு நிதி உதவி வழங்கும் என்றும் கூறினார்.  மேலும், அவர்களுக்கு சாலை வசதி செய்து கொடுக்க நிதி ஒதுக்கப்படும் என்றும் ,இதற்காக சர்வே எடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும், அப்பகுதியில், நிலங்களை பழங்குடியின மக்களுக்கு உறுதி செய்யும் வகையில், ஒப்படைப்பு செய்யபடும் என்று தெரிவித்தார்.

நமது நிருபர்