Sun. Oct 6th, 2024

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை | மானியக் கோரிக்கையில் புதிய அறிவிப்புகள்

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை | மானியக் கோரிக்கையில் புதிய அறிவிப்புகள்

ஜூலை, 5,2019

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை மீதான மானியக் கோரிக்கையில், பல கோடி ரூபாய் மதிப்பில்,புதிய திட்டங்களை,முதல்வர் சட்டப்பேரவையின் 110 விதியின் கீழ் அறிவித்தார்.

பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில், ஒவ்வொரு அணியிலும் கூடுதல் பணியாளர்கள் பயிற்சி பெறும் பொருட்டு, புதிய வகுப்பறைகள் மற்றும் விடுதிக் கட்டிடம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் ரூபாய் 10 கோடி செலவில் ஏற்படுத்தப்படும். அண்ணா மேலாண்மை நிலையத்தில் கூடுதல் தளம் கட்டுதல் வகுப்பறைகளை நவீன வகுப்பறைகளாக மேம்படுத்துதல் ஆகிய பணிகள் ரூபாய் 5 கோடி நிறைவேற்றப்படும்.

அண்ணா மேலாண்மை நிலையத்திற்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் மானியத்தொகை, 86 புள்ளி 70 லட்சம் என்பது நடப்பு நிதியாண்டில் இருந்து 2 கோடி என உயர்த்தி வழங்கப்படும். போட்டித் தேர்வுகளை எதிர் கொள்வதற்கு முறையான பயிற்சி அளிக்க, சென்னையில்,மற்றுமொரு பயிற்சி மையத்துடன் கோயம்புத்தூர் மதுரை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு போட்டித் தேர்வு பயிற்சி மையம் என மொத்தம் நான்கு புதிய பயிற்சி மையங்கள் இவ்வாண்டு முதல் துவங்கப்படும். 2019 2020 ஆம் ஆண்டில் 4.44 கோடியும் அதன் பின்னர் தொடரும் செலவினமாக 3.51 கோடியும் ஆண்டுதோறும் வழங்கப்படும்.

அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில்,அழிக்கப்பட்டு வருகின்ற பயிற்சிகளை, தொலைதூரத்தில் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களும் பார்த்து பயன் பெறும் வகையில், சில தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி நிகழ்ச்சிகளை, வலை தளத்தில் நேரடியாக ஒளிபரப்புவதற்காக, 2009 2010ஆம் ஆண்டில் 33 லட்சம் அதன் பின்னர் தொடரும் செலவினமாக 15 லட்சம் ஆண்டுதோறும் வழங்கப்படும். புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட அரசு பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, தற்போது அனுமதிக்கப்பட்ட விடுப்புகளுடன்,கீமோதெரபி மற்றும் ரேடியோ தெரபி சிகிச்சை பெறும் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு முழு ஊதியத்துடன் பத்து நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்கப்படும்.

நமது நிருபர்