Sun. Oct 6th, 2024

மீன் வளத்துறை மீதான மானியக் கோரிக்கை | 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகள்

மீன் வளத்துறை மீதான மானியக் கோரிக்கை | 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகள்

மீன் வளத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடைபெற்றது.இதில்,பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை,சட்டப்பேரவையின் 110 விதியின் கீழ், முதல்வர் அறிவித்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் கிராமங்களில் 8 கோடி ரூபாய் செலவில் முகத்துவாரம் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்று இடங்களில் புதிய மீன் இறங்கு தளங்கள் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டம் புத்தன் துறை கிராமத்தில் 5 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்கு தளம் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள நான்கு மீன்பிடி துறைமுகங்களில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மீன்களை சுகாதாரமான முறையில் கையாள்வதற்கு மீன் பதப்படுத்தும் மையங்கள் மற்றும் மீன் ஏலம் விடும் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஆகிய இடங்களில் மீன்வளத் துறை அலுவலக கட்டடங்கள் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீனவர் கிராமத்தில் கடல் இருப்பினை தடுத்திட ஒரு கோடியே 87 லட்சம் ரூபாய் செலவில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் அருகில் இரயுமன்துறை பகுதியில் ஒரு கோடியே 74 லட்சம் ரூபாய் செலவில் அணுகு சாலை அமைக்கப்படும்.

மூக்கையூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடிப்பதற்கு முந்தைய மற்றும் பிந்தைய தொடர் உயிர்காப்பு வசதிகள் மற்றும் ஏற்றுமதிக்கான உட்கட்டமைப்புகள் 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். நாகப்பட்டினம் மாவட்டம் பழையாறு மீன்பிடித் துறைமுகம் மற்றும் நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் சூரிய ஒளியினால் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவர் தளம் 3 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். பாரம்பரிய மீனவர்கள் மீன்பிடித்து திறனை அதிகரித்திட உட்புறம் மற்றும் வெளிப்புறம் இயந்திரங்கள் 12 கோடியே 48 லட்சம் ரூபாய் மானியத்தில் வழங்கப்படும்.

பாரம்பரிய படுக்கைகளுக்கு மாற்றாக கண்ணாடி நாரி இழைப் படகுகள் இயந்திரங்கள் மற்றும் வலைகள் 200 மீனவர்களுக்கு 3 கோடியே 40 லட்சம் ரூபாய் மானியத்தில் வழங்கப்படும். அண்மை கடலோர மீனவர் களை அதிகரித்திட திருவள்ளூர் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 30 இடங்களில் 10 கோடி ரூபாய் செலவில் செயற்கை மீன் உறைவிடங்கள் அமைக்கப்படும்.காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் மற்றும் விருதுநகர் மாவட்டம் பல வகைகளில் உள்ள அரசு மீன் குஞ்சு வளர்ப்புப் பண்ணைகள் 4 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்படும். தஞ்சாவூர் கடலூர் ஈரோடு கன்னியாகுமரி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஆறு இடங்களில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு சேவை மையங்கள் நிறுவப்படும்.

பண்ணைக் குட்டைகளில் மேம்படுத்தப்பட்ட திலேபியா மீன் வளர்ப்பினை ஊக்குவித்து விட மீன் வளர்ப்போருக்கு 87.2 லட்சம் ரூபாய் செலவு திட்டம் செயல்படுத்தப்படும். விழுப்புரம் கடலூர் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மீன்குஞ்சு மற்றும் மீன் உற்பத்தியை பெருக்கிட, 95 இலட்சம் ரூபாய் செலவில் மீன் குஞ்சு வளர்ப்புப் பண்ணைகள் அமைக்கப்படும்.தர்மபுரி மாவட்டம் சின்னாறு மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் அணைப்பட்டி மீன் பண்ணைகளில் 55 லட்சம் ரூபாய் செலவில், தீவிர மீன்குஞ்சு வளர்த்தெடுக்கும் வசதிகள் ஏற்படுத்தப்படும். உள்நாட்டு மீன் உற்பத்தியை பெருக்கிட 28 லட்சம் ரூபாய் செலவில் நாட்டினர் தொண்டை மீன்கள் மற்றும் நன்னீர் இறால் குஞ்சுகள் உள்நாட்டு நீர் நிலைகளில் இருப்பு செய்யப்படும். நன்னீர் முத்து சிப்பி வளர்க்கும் திட்டம் 50 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். கடல் மற்றும் உள்நாட்டு மீனவர்களுக்கு 85 லட்சம் ரூபாய் செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும்.

தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக கட்டுப்பாட்டில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி நீர்த்தேக்கங்களில் 20 லட்சம் ரூபாய் செலவில் உள்நாட்டு மீன் இயக்குதளம் வசதிகள் அமைக்கப்படும். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் மூலம் 50 லட்சம் ரூபாய் செலவில் ஒரு நவீன கடல் மீன் உணவகம் மற்றும் இரண்டு நவீன மீன் விற்பனை நிலையங்கள் நிறுவப்படும். பொதுமக்கள், மீன் உணவின் பயன்கள் மற்றும் அதன் பல்வேறு வகையில் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 50 லட்சம் ரூபாய் செலவில் சென்னையில் மீன் உணவுத் திருவிழா நடத்தப்படும். ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் மீன்பிடி துறைமுகத்தில் 10 லட்சம் ரூபாய் செலவில் புதிய டீசல் விற்பனை நிலையம் அமைக்கப்படும்.

தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான உக்கடம் மொத்த மீன் விற்பனை நிலையம் மற்றும் சென்னையில் உள்ள மைய சமையல் கூடத்தில் மீன் கழிவுகள் மேலாண்மை வசதிகள் 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். நாகப்பட்டினம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் தருவை குளத்தில், பனிக்கட்டி உற்பத்தி நிலையங்கள் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு இணையதளம் மூலம் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

பாக் வளைகுடா பகுதியில் கடற் பாசி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள மீனவ மகளிருக்கு 50 லட்சம் ரூபாய் சிறு வணிகக்கடன் வழங்கப்படும். இயற்கை இடர்பாடுகளின் போது, சேதமடையும் மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்களை உருவாக்கும் பொருட்டு, அவை காப்புறுதி திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும். தமிழக மீனவ சமுதாயத்தின் சமூக பொருளாதார நிலை குறித்து விரிவான ஆய்வுகள் 50 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில்,மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகளை  ஏற்படுத்துதல் மற்றும் நீர்வாழ் உயிரின  வளர்ப்பிற்கு ஏற்றப் பகுதிகளை தேர்வு செய்வதற்கான ஆய்வு பணிகள் ஒரு கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

கடல் மற்றும் உள்நாட்டு மீன்பிடி புள்ளிவிவரத் தகவல் சேகரிக்கும் திட்டம் ஒரு கோடியே 47 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில்,மீன் உற்பத்தியினை அதிகரித்திட, பல்வேறு இன மீன் குஞ்சுகள் 60 லட்சம் ரூபாய் செலவில் இருப்பு, செய்யப்படும். தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர்களுக்கு, பல்வேறு உதவித் திட்டங்களை, துரிதமாக வழங்கிட,நவீன நுண்ணறிவு அடையாள அட்டைகள் மற்றும் இணையதள சேவைகள் 50 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

நமது நிருபர்