Mon. Oct 7th, 2024

போலி நகைகளை வைத்து ஏமாற்றும் | இரண்டு பெண்கள் கைது |

ஜூலை 2-2019

போலி நகைகளை, அடமானம் வைத்துக் கொண்டு, பணம் கேட்ட, ஈரோட்டைச் சேர்ந்த இரு பெண்கள் கைது..

இன்று காலை, அபிராமபுரம்,
சிவி.ராமன் சாலை, பீமண்ணா முதலி தெருவில், இரண்டு பெண்கள், தங்க கொலுசுகள் மற்றும் தங்க செயின் ஆகியவற்றை வைத்துக்கொண்டு, நாங்கள் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். சென்னைக்கு ஒரு வேலையாக வந்தோம். அவசர தேவையாக பணம் தேவைப்படுகிறது என அங்கு வருவோர் போவோரிடம், அடகு கடை எங்கு இருக்கிறது ? இதனை வைத்து பணம் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும், அடகுக் கடை இல்லை என்றாலும் பரவாயில்லை. நகைகளை நீங்கள் வைத்துக்கொண்டு, கணிசமான தொகையைக் கொடுத்தால், சில தினங்களில் மீட்டுக் கொள்வோம் என்றும் கூறியுள்ளனர். இதனால், சந்தேகம் அடைந்த பொதுமக்கள், அபிராமபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த இரண்டு பெண்களையும், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில்… அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த பூங்கொடி(28) மற்றும் நந்தினி(20) என்பதும், மேலும், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஐந்து கொலுசுகள், செயின்கள் ஆகியவை போலியானவை மேலும் ரூபாய் 10 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டு… இவர்கள் போலி நகைகளை கொடுத்து ஏமாற்றுபவர்கள் என்பதை உறுதி செய்து… இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிருபர் – கோகுலன்