Sun. Oct 6th, 2024

முகிலன் வழக்கில் ஆய்வாளர் பெயர் மாற்றம் | வெல்ஃபேர் கட்சி கண்டனம் |

ஜூன் 29-2019

சூழலியல் போராளி தோழர் முகிலன் கடத்தப்பட்டு, நூறு நாட்களுக்கு மேலாகியும்… காவல் துறையினர், அவரை கண்டுபிடிக்காமலும், எவ்வித உருப்படியான தகவல்களை நீதிமன்றத்திற்கு தராமலும் இழுத்தடிக்கின்றனர்.

முகிலன் கடத்தப்பட்ட நாள் முதல் அவரை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், வெல்ஃபேர் கட்சி… தமிழ்நாடு சார்பாக மாநில செயலாளர் முகம்மது கவுஸ் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முகிலனை குறித்து முகநூலில் அவர் வெளியிட்ட பதிவிற்கு காவல் ஆய்வாளர் நாகராஜ் நாராயனன்  ‘சமாதி’ என பதிவிட்டதை உரிய ஆதாரங்களுடன் CBCID வசம் புகாரும் அளிக்கப்பட்டது.

காவல் ஆய்வாளர் நாகராஜ் நாராயணனின் இந்த வாக்குமூலத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க ஐநாவின் மனித உரிமை கவுன்சில்  நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த வழக்கு நேற்று 27.6.2019 அன்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பொழுது…
முகிலன் தரப்பு வழக்கறிஞ்ர் மேற்படி “சமாதி” என்ற பதிவை காவல் ஆய்வாளர் முகம்மது கவுஸ் பதிவிட்டார், என்று கூறியதாக… தகவல் வெளியாகியுள்ளது.
இது  காவல்துறை திட்டமிட்டு வழக்கை தாமதப்படுத்தி திசை திருப்புவதற்கான முயற்சியோ என்ற ஐயப்பாடு எழுகிறது.

மேலும் வெல்ஃபேர் கட்சியின் மாநிலசெயலாளர் முகம்மது கவுஸ்சின் பெயரை தவறாக பயன்படுத்தி இருப்பது, அவரை மேற்படி வழக்குகளில் சிக்க வைப்பதற்கான முன்னேற்பாடுகளா என்ற வலுவான சந்தேகமும் எழுகிறது. இதை வெல்ஃபேர் கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.


மேற்படி வழக்கை இனியும் CBCID காவல்துறை கையாளுமானால் முகிலன் வழக்கு ஒன்றுமில்லாமல் போகும். எனவே இவ்வழக்கை நீதிமன்றம் தனது நேரடி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அல்லது மத்திய புலனாய்வுத்துறையின் வசம் ஒப்படைக்க வேண்டும் என வெல்ஃபேர் கட்சி, தமிழக நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
வெல்ஃபேர் வாழ்த்துக்களுடன் 

கே.எஸ்.அப்துல் ரஹ்மான்,
மாநிலப் பொதுச் செயலாளர்.