Fri. Dec 20th, 2024

குட்கா வழக்கில் சிபிஐ அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ரமணா இன்று ஆஜராகியுள்ளார்…

மீண்டும் பூதாகரமாக விஸ்வரூபம் எடுத்துள்ள குட்கா ஊழல் விவகாரத்தில் பல்வேறு பெரும் புள்ளிகள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டமாக அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் நேரில் ஆஜராகி உள்ளார்…

தமிழகத்தில் 2013 ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தடை செய்யப்பட்ட குட்கா விவகாரத்தில் மீண்டும் தமிழகம் முழுவதும் கோடி கணக்கில் சந்தையில் விறபனையானது. இதில் முக்கியமாக நெற்குன்றம் மாதவராவ் குடோனில் பறிமுதல் செய்யப்பட்டது. அங்கு வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ நடத்திய சோதனையில் தமிழகத்தின் முக்கிய புள்ளிகளான அப்போதைய பொதுபணித்துறை அமைச்சர் ஓ.பி.எஸ், அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., டி.கே ராஜேந்திரன், முன்னாள் சென்னை போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோரின் பெயர் இருந்தாக டைரி கைபற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து எதிர்கட்சியான திமுக இந்த வழக்கினை சி.சி.பி. லிருந்து சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் என வழக்கு தொடர்ந்தது இதனால் இந்த வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றி உத்தரவிட்டது.

அதன் பிறகு இந்த வழக்கை சி.பி.ஐ. கையிலெடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் சி.பி.ஐ.யின் விசாரணை வட்டத்துக்குள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஜார்ஜ், டி.ஜி.பி ராஜேந்திரன் உள்ளிட்ட பலரின் வீடுகளில் அதிரெடி சோதனை நடத்தப்பட்டது.

இதன் அடுத்தக்கட்டமாக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த ஜெயகுமார், ஆய்வாளர் மன்னர் மன்னன், ஆய்வாளர் சம்பத் ஆகியோர், சி.பி.ஐ அலுவலகத்திலிருந்து சம்மன் அனுப்பப்பட்டு நேரில் வரவழைக்கப்பட்டு இரண்டு நாட்கள் விசாரணைக்கு உடப்படுத்த பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக அடுத்தகட்டமாக அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் சரவணனுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பட்டு ஆஜராகத நிலையில் சம்மன் அனுபியது அதனை தொடர்ந்து அமைச்சரின் உதவியாளர் சரவணன் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த நிலையில் சுகதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் ரமணா ஆகியோர் சி.பி.ஐ அலுவலகத்தில் நேரில் ஆஜர்.

தற்போது குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று சம்மன் அனுப்பினர். இதனை தொடர்ந்து தற்போது முன்னாள் அமைச்சர் ரமணா மட்டும் சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார் என தகவல்…