Tue. Oct 8th, 2024

வழிப்பறியில் ஈடுபட்டவர்களை | வண்டி நம்பர் மூலம் கைது செய்த போலீசார் |

ஜூன் 20-2019

கன்னியாகுமாரி மாவட்டத்தில் தொடர்கதையாக நடைபெற்று வந்த… வழிப்பறி கொள்ளை, தங்க சங்கிலி பறிப்பு, இருகக்கர வாகன திருட்டு என எண்ணற்ற அளவில் புகார்கள் பதிவான நிலையில், எந்த ஒரு தடயமும் இது தொடர்பாக கிடைக்காத நிலையில் ஆய்வாளர் சித்தார்த் தலைமையில்… தனிப்படை அமைக்கப்பட்டு அதில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்தனர்.

சம்பவம் நடைபெற்ற இடங்களில் விசாரணை செய்து அங்கு கிடைத்த CCTV camera வின் பதிவுகளை ஆய்வு செய்ததில்.. ஒரு இரு சக்கர வாகனத்தில் பதிவு எண் தெளிவாக கிடைக்க… அந்த பதிவு எண்ணின் முகவரியை தேடி அங்கு விரைந்த போலீசார் அல்வின் பிரபு என்ற கள்ளன் பிரபுவை பிடித்து விசாரித்ததில்… அவர்களது கூட்டாளிகளான சதீஷ்குமார் என்ற சதீஷ் மற்றும் நாகராஜன் என்பவர்களுடன் சேர்த்து சுமார் 13 இடங்களில் வழிப்பறி செய்து வந்ததாக ஒப்புகொண்டார். அல்வின் பிரபு 2014, 2017 & 2018 ஆண்டுகளில் நடந்த வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர் என்றும், 2018 ஆம் ஆண்டு தனது கூட்டாளி சதீஷ் உடன் சேர்ந்து தங்களிடம் இருடியம் இருப்பதாக கூறி.. கன்னியாகுமரி, நையாற்றுக்கரை, பாண்டிச்சேரி, பொன் அமராவதி, கரூர் ஆகிய இடங்களில் உள்ள பலரிடம் பணத்தை பறித்துள்ளனர். பெரும்பாலானோர் தங்கள் ஏமாற்றப்பட்ட விவரங்களை காவல்துறையிடம் கூறாமலும் இருந்துள்ளனர்… என விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இதில் தொடர்புடைய இரண்டு தலைமறைவான குற்றவாளிகளிடம் இருந்து
சுமார் 13 வழக்கில் தொடர்புடைய ரூ.14,25,000/- மதிப்புள்ள 456 கிராம் எடையுள்ள தங்க நகைளை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்தனர்…

நிருபர் ராம்