Sat. Dec 21st, 2024

கம்மாய் கரையில் தோண்டத் தோண்ட | 17-ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு |

ஜூன் 18-2019

புதுக்கோட்டை அருகே பேரையூர் கம்மாய் கரையில் தோண்டத் தோண்ட 17 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு.

பேரையூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த நாகநாத சாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் பின்புறம் 200 அடி தூரம் உள்ள முத்தையா என்பவருக்கு சொந்தமான கம்மாக்கரை இடம் உள்ளது. அந்த இடத்தில் பட்ட மரங்கள் அதிகமாக உள்ளதால்… அந்த பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் பட்ட மரங்களை ஏலத்துக்கு வாங்கி, அதை அப்புறப்படுத்தி ஜேசிபி மூலம் வேர்களை அகற்றும் பொழுது… விநாயகர் சிலை ஒன்று தட்டுப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதியில் ஜேசிபி மூலம் தோண்டும்போது தொடர்ந்து சிலைகள் எடுக்கப்பட்டது.

இதனை அடுத்து ஐயப்பன் என்பவர் திருமயம் வருவாய் துணையிருக்கும் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் ஜேசிபி மூலம் தோண்டத் தோண்ட மேலும் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இதில் ஒரு அடி முதல் 3 அடி உயரம் வரை விநாயகர் சிலை, அம்மன் சிலை, நடராஜர் சிலை உள்ளிட்ட 17க்கும் மேற்பட்ட 100 ஆண்டுகள் பழமையான ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் சிலைகளை பார்ப்பதற்காக வந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கப்பட்டது. மேலும் தாசில்தார், தொல்லியல் துறை உள்ளிட்ட அதிகாரிகள் வந்து கண்டெடுக்கப்பட்ட சிலைகள் மீட்டு திருமயம் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்பகுதியில் தோண்டத் தோண்ட ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டதால்… அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது…

நமது நிருபர்