Sat. Dec 21st, 2024

டேங்கர் லாரி மோதி மனைவி பலி |கணவர் படுகாயம் | டிரைவர் கைது |

ஜூன் 18-2019

சென்னை நெற்குன்றம் பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்த கணவன் மனைவி இருவர் மீது டேங்கர் லாரி மோதி மனைவி சம்பவ இடத்திலேயே பலி. கணவருக்கு பலத்த படுகாயம். லாரி ஒட்டுனர் கைது.

சென்னை நெற்குன்றம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (67) இவருடைய மனைவி காளியம்மாள்(65). இருவரும் நேற்று அதிகாலை 4.45 மணி அளவில் நெற்குன்றம் பெருமாள் கோயில் அருகே பேருந்திற்காக காத்திருந்தனர்.

அப்பொழுது அந்த வழியாக வேகமாக வந்த டேங்கர் லாரி… அவர்கள் மீது மோதியது. இதில் காளியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விஜயகுமார் பலத்த படுகாயம் அடைந்தார்.

அதைத்தொடர்ந்து கோயம்பேடு போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிருக்கு போராடிய விஜயகுமாரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திலே இறந்து போன காளியம்மாளை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவர் மனைவி மீது மோதிய மயிலாடுதுறை குறிச்சி கிராமத்தை சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுநர் விஜயபாலனை (35) கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

நமது நிருபர்