Mon. Oct 7th, 2024

விபத்தில் சிக்கிய வாகனத்தில் இருந்த | ₹69 லட்சத்தை ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் |

ஜூன் 16-2019..,

தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.! காரிலிருந்து 69 லட்சம் ரூபாயை மீட்டு காவல் துறையிடம் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்..!!

சென்னை, மாதவரம் பகுதியில் இரும்பு வியாபாரம் செய்து வரும் செட்டியார் என்பவர்… தனது தனது ஊழியர்களை வேலூர் மாவட்டத்திற்கு அனுப்பி அவருக்கு இரும்பு கடையில் இருந்து வரக்கூடிய நிலுவைத் தொகையை வசூலித்து வரும்படி நேற்று அனுப்பி வைத்துள்ளார்.  வேலூர் மாவட்டத்தில் வசூல் செய்த 69 லட்சம் ரூபாய் உடன் காரில்  சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது.. காஞ்சிபுரத்தை அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் சின்னையன் சத்திரம் என்கின்ற பகுதியில் காரின் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இதில் காரில் பயணம் செய்த முரளி என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த இருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதை கண்ட அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் விஜயன் மற்றும் ஓட்டுநர் சந்தானம் படுகாயமடைந்த இருவருக்கு சிகிச்சை அளித்து அவர்களை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் காரில் சிதறிக்கிடந்த பணக்கட்டுகளை எடுத்துக்கொண்டு காஞ்சிபுரம் தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர் களின் நேர்மையை காவல்துறையினரும் மருத்துவ நிர்வாகத்தினரும் பாராட்டினர்..

நமது நிருபர்