Sun. Dec 22nd, 2024

வில்லிவாக்கம் பகுதியில் தொடர் கொள்ளை | உரிய குற்றவாளிகளை இதுவரை பிடிக்கவில்லை? |

ஜூன் 15-2019

சென்னை வில்லிவாக்கம் காவல் நிலைய எல்லையில் தொடர் வழிப்பறி, செல்போன் பறிப்பு மற்றும் அடிதடி சம்பங்கள் அதிகரித்து வருகின்றது.

குற்றவாளிகளை இன்னும் பிடிக்க முடியாமலும், உயர் அதிகாரிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க முடியாமல் தவிப்பதாக தகவல். கடந்த மே 7ஆம் தேதியன்று வில்லிவாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சவீதா(20). சிட்கோ நகர் வழியாக செல்போன் பேசி கொண்டு சென்றார். அந்த வழியாக பைக்கில் வந்த மர்ம நபர்கள் சவீதாவை தாக்கி விட்டு செல்போனை பறித்து சென்றனர். அதே போல் வில்லிவாக்கத்தில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து துணி மற்றும் 50ஆயிரம் பணம் கொள்ளை அடித்ததும்
அப்பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியல் பணத்தை எடுக்க கண்ணாடிகளை அடித்து நொறுக்கி 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து சென்றதும் குறிப்பிடத்தக்கது.

இது வரையில் எந்த வழக்கிலும் குற்றவாளிகள் யார்? என்று கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருவதாக தெரிகிறது. அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா வைப்பதற்கு ஆர்வம் காட்டி வரும் போலீசார் குற்றங்களில் ஈடுபடுவர்களை பிடிக்க ஆர்வம் காட்டுவதில்லை.! எனவே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்…

நமது நிருபர்