காவல் நிலைய கட்டிடத்தை | காணொளி மூலம் முதல்வர் திறந்து வைத்தார் |
காவல் நிலைய கட்டிடத்தை | காணொளி காட்சி மூலமாக முதல்வர் திறந்து வைத்தார் |
அண்ணாநகர் திருமங்கலம் பகுதியில் இயங்கி வந்த காவல் நிலையமானது பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது அது பழுந்தடைந்து காணப்பட்டதால் தமிழ்நாடு காவல்துறை வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் காவல்நிலையம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த நிலையில் புதிய காவல் நிலையம் கட்டிட நிதி ஒதுக்கப்பட்டு கடந்த ஒருவருட காலம் முன்பாக புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது கடந்த ஏப்ரல் மாதம் பணிகள் முடிவடைந்து கட்டிடம் திறக்கப்பட வேண்டிய சூழலில் தேர்தல் காரணமாக பணிகள் காலதாமதம் ஆனதால் புதிய காவல் நிலைய கட்டிடம் திறக்கப்பட்டது. நான்கு அடுக்கு மாடிகளை கொண்ட இந்த கட்டிடம் 9487.63 சதுர அடி பரப்பளவில் 172.99 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் தரைத்தளத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வரவேற்பு அறையும், கார் பார்க்கிங் உள்ளது. முதல் தளத்தில் சட்டம் ஒழுங்கு காவல் நிலையமும், உதவி ஆணையர் அலுவலகம் உள்ளது. இரண்டாம் தளத்தில் குற்றவியியல் காவல் நிலையமும், மூன்றாம் தளத்தில் மகளிர் காவல் நிலையமும், 4வது தளத்தில் போக்குவரத்து காவல் நிலையமும் அமைந்துள்ளது.
மேலும் மாற்றுதிறனாளிகளுக்கென தனி பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தை சுற்றியும் மழைநீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த காவல் நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். காவல் உதவி ஆணையர் சிவக்குமார், திருமங்கலம் காவல் ஆய்வாளர் சரவணன், நொளம்பூர் ஆய்வாளர் விவேகானந்தர் , சத்தியலிங்கம் உள்ளிட்ட காவல் துறையினர்கள் கலந்துகொண்டனர்…
நமது நிருபர்