மெட்ரோ ரயில் நிலையத்தின் மீது இருந்து குதித்து இறந்த பள்ளி மாணவன்…
ஜூன், 08-2019…,
மெட்ரோ ரயில் நிலையத்தின் மீது இருந்து குதித்து இறந்த பள்ளி மாணவன்…கோயம்பேடு போலீசார் விசாரணை
சென்னை, தேனாம்பேட்டை, எல்லையம்மன் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(45). இவரது மகன் ஸ்ரீவந்த் கே.அருண் (17), சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை 3:15 மணி அளவில் வீட்டிற்கு செல்வதற்காக… மெட்ரோ ரயில் மூலம் கோயம்பேடு வந்த ஸ்ரீவந்த் கே.அருண் ரயிலில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் அருகிலிருந்த படிக்கட்டு வழியாக மேலே ஏறி அங்கிருந்து தீடீர் என்று கீழே குதித்தார்.
இதனை கண்டதும் அங்கிருந்த மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு சத்தம் போட்டனர். கீழே விழுந்து ரத்தக் காயங்களுடன் இருந்த அருணை மீட்டு… ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோயம்பேடு காவல் ஆய்வாளர் இறந்து போன அருணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து… அருண் குதித்து தற்கொலையா? அல்லது வேறு காரணம் உண்டா என தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
பள்ளி மாணவன் மெட்ரோ ரயில் நிலைய மாடியில் இருந்து கீழே குதித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
நமது நிருபர்