சந்தானத்தின் “டகால்டி” | ஜாக்கிசான் ஸ்டைலில் சண்டை காமெடி படம் |
ஜூன், 07-2019…,
சந்தானம் ஆக்ஷன் கலந்த காமெடி கதையில் நடிக்கிறார். ஜாக்கிசான் படங்களில் வருவது போல் நகைச்சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
அவருக்கு ஜோடியாக பெங்காலியில் முன்னணி கதாநாயகியாக உள்ள ரித்திகாசென் நடிக்கிறார். மேலும் சந்தானத்துடன் முதன் முறையாக யோகிபாபு இணைந்து நடிப்பதால்.. இந்தப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ராதாரவி, ரேகா, இந்தி நடிகர் ஹேமந்த்பாண்டே, சந்தானபாரதி, மனோபாலா, நமோநாராயணா, ஸ்டண்ட் சிவா ஆகியோருடன் இந்தி திரையுலகின் பிரபல நடிகர் ஒருவர் வில்லனாக என… நிறைய நட்சத்திர பட்டாளமே இதில் நடிக்கின்றனர் என்று கூறினார் இயக்குனர் விஜய் ஆனந்த். இவர் இயக்குனர் ஷங்கரிடம் பல படங்களில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது.
பின்னனி பாடகர் விஜய்நாராயணன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார், கார்கி பாடலையும் தீபக்குமார்பதி ஒளிப்பதிவையும், டி.எஸ் சுரேஷ் படத்தொகுப்பையும், ஜாக்கி கலையையும், ஸ்டண்ட் சிவா சண்டைப் பயிற்சியையும், ஷோபி நடனப் பயிற்சியையும், தயாரிப்பு மேற்போர்வையை சுவாமிநாதனும், இணை தயாரிப்பை ரமேஷ்குமாரும் கவனிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூர், திருநெல்வேலி, காரைக்குடி, சென்னை, அம்பாசமுத்திரம், கடப்பா, புனே, மும்பாய் போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. டகால்டி படத்தை 18 ரீல்ஸ் என்ற நிறுவனம் சார்பில் திருப்பூரைச் சேர்ந்த பிரபல டாக்டரும், முன்னணி திரைப்பட விநியோகஸ்தருமான எஸ்.பி. செளத்ரி மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறார்.
டகால்டி படத்தை அடுத்து, சமீபத்தில் சந்தானம் நடித்து வெளிவந்த மிகப்பெரும் வெற்றி அடைந்த தில்லுக்குதுட்டு 2 படத்தின் அடுத்து பாகத்தை (தில்லுக்குதுட்டு 3) ஏராளமான பொருட்செலவில் 3D தொழில்நுட்பத்தில் (முப்பரிமானத்தில்) 18ரீல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க சந்தானத்துடன் தயாரிப்பாளர் எஸ்.பி.செளத்ரி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராண்மை.காம்