Sat. Jan 4th, 2025

3 வயது சிறுவன் மீது கார் மோதி தூக்கி வீசப்பட்டான் | கார் ஓட்டிய பெண் மாயம் |

ஜூன், 06-2019…,

3 வயது சிறுவன் மீது கார் மோதி தூக்கி வீசப்பட்டான்… கார் ஓட்டிய பெண் மாயம்… ஆபத்தான நிலையில் சிறுவன் அரசு மருத்துவமனையில் அனுமதி கார் ஓட்டி
வந்த பெண் மாயம்,
கார் பறிமுதல்.

சென்னை அண்ணா நகர் பகுதியில் சாலை ஓரத்தில் தங்கி வரும் மணி இவருடைய மனைவி தன்னுடைய மகன் கவுதம் வயது 3. இருவரும் ஜூன் 5, அன்று மாலை 4.30 மணி அளவில் மூன்றாவது அவன்யூ பகுதியில் சாலை கடக்கும் போது அந்த வழியாக வந்த கார் வேகமாக சிறுவன் கவுதம் மீது மோதியதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டான். உடனே அருகில் இருந்த மக்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவைத்து எழும்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு… ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான். தகவல் அறிந்து வந்த அண்ணா நகர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் முருகேசன் சிறுவன் மீது மோதிய பெண்னை தப்பிக்க விட்டதாக தெரிகிறது. காரை மட்டும் பறிமுதல் செய்ததாகவும்… கார் ஓட்டி வந்த பெண் யார் என்று தெரியவில்லை என்றும்… தற்போது தலைமறைவாக உள்ளார் என போலீசார் நிருபர்களிடம் தெரிவிக்கின்றனர்.

ஆனால் சிறுவன் மீது மோதிய பெண் மீது வழக்கு பதிவு எதுவும் பதிவு செய்ததாக தெரியவில்லை…

நமது நிருபர்