Thu. Jan 2nd, 2025

7-பேர் பெயரில் 9,லட்சம் மோசடி | IOB வங்கி மதிப்பீட்டாளர் கைது |

ஜூன் 05-2019…,

7-பேர் பெயரில் 9,லட்சம் மோசடி | IOB வங்கி மதிப்பீட்டாளர் கைது |

அரக்கோணம் திருத்தணி சாலையில், தேசியமயமாக்கப்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கி வருகிறது. திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த துளசிதாஸ் (50) என்பவர் நகை மதிப்பீட்டாளராக வேலை செய்து வருகிறார். தாஸ் வங்கியில் மற்றவர்கள் பெயரில் போலி நகைகளை வைத்து, ரூ.7 லட்சம் கடன் பெற்றுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக வங்கி மேலாளர் கோபாலகிருஷ்ணன் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 7 பேர் பெயரில் போலி நகையை வைத்து அசல் ரூ,7-லட்சமும், ரூ.2லட்சம் வட்டியுடன் சேர்த்து ரூ.9 லட்சம் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அரக்கோணம் டவுன் காவல் நிலையத்தில் வங்கி மேலாளர் கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம் வழக்கு பதிவு செய்து மோசடி செய்தது தொடர்பாக, நகை மதிப்பீட்டாளர் துளசிதாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது…

நமது நிருபர்