மகளிருக்கான நவீன சுகாதார மையம் திறப்பு |
ஜூன், 04-2019…,
மகளிருக்கான நவீன சுகாதார மையம் திறப்பு |
ஸ்ரீரங்கம் கோட்டம் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் பல்வேறு வசதிகளுடன் கூடிய மகளிருக்கான பிரத்யேக நவீன கழிப்பறையை ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு ஆணையர் ந.இரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.
சத்திரம் பேருந்து நிலையம் மேல்நிலை குடிநீர்தேக்கத் தொட்டி அமைந்துள்ள பகுதியில் இந்த கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. நவீன சுகாதார மைய வளாகத்தில் 6 மேற்கத்திய வடிவ கழிப்பறைகளும் 24 மணி நேரமும் தண்ணீர் வசதி கிடைக்கும் வகையில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்ட்டுள்ளன. மற்றும் சென்சார் மூலம் இயங்கும் கதவுகள், மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான பிரத்யேக அறைகளும் இடம் பெற்றுள்ளன. கழிபப்பறையை பயன்படுத்திய பிறகு கிருமி நாசினி மருந்துகள் கொண்டு கைகளை கழுவுவதற்கான பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கட்டணம் செலுத்தி நாப்கின் பெற்றுக்கொள்ளும் இயந்திரமும் இடம் பெற்றுள்ளது.
மேலும் பயன்படுத்திய நாப்பின்களை சுகாதார முறையில் மின்சார வசதியுடன் சாம்பலாக மாற்றும் இன்சிலேட்டர் இயந்திரமும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த வளாகத்தில் மகளிருக்கான மருத்துவ ஆலோசனைகள், மாதவிடாய் சுகாதார மேலாண்மை, பரிசோதனைகளை ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஹெல்த் கிளீனிக் அமைக்கப்படுகிறது.
மேலும், பணம் எடுத்துக்கொள்ளும், வசதியுடன் கூடிய ஏடிஎம் மையமும் அமைக்கப்பட உள்ளது..
நமது நிருபர்