10-லட்சம் ரூபாய் கேட்டு | பெண்னை கடத்திய வழக்கில் 5 பேர் கைது | 4 பேர் தலைமறைவு |
ஜூன் 04, 2019…,
10-லட்சம் ரூபாய் கேட்டு | பெண்னை ப்கடத்திய வழக்கில் 5 பேர் கைது | 4 பேர் தலைமறைவு |
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த திலகவேணி (51). இவர் அதே பகுதியை சேர்ந்த சகாயராணி என்பவரிடம் வீட்டு மனையை 50 லட்சம் ரூபாய் பேசி… 35 லட்சம் முன் பணமாக கொடுத்து.. பாத்திரத்தை கரையம் செய்து, மீதமுள்ள 15 லட்சம் இரண்டு வருட கால அவகாசம் பெற்று.. அதில், சிறுக சிறுக 5 லட்சம் ரூபாய் செலுத்தியதாகவும்… மீதமுள்ள 10 லட்சத்திற்காக… சகாயராணியின் கணவர் அந்தோணிதாஸ் என்பவர் கடந்த 22ம் தேதி திலகவேணி என்பவரை தொலைபேசியில் அழைத்து… நேரில் பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.
உடனே திலகவேணி அமைந்தகரை ஸ்கைவாக் எதிரில் நின்று கொண்டு இருந்தார். அந்த வழியாக காரில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் திலகவேணியை சரமாரியாக தாக்கி காரில் கடத்தி சென்றார். பயந்து போன திலகவேணி… என்னை காப்பாற்றுங்கள் என்று காரில் சத்தம் போட்டார். காரில் இருந்த மர்ம நபர்கள் திலகவேணியின் வாயை துணியால் கட்டி நீலங்கரையில் விஜிபி அருகே உள்ள தனியார் ஒட்டலில் தனி அறையில் அடைத்து… மீதியுள்ள 10 லட்சத்தை உடனடியாக திருப்பி கொடு என்று கத்தியை காட்டி மிரட்டி, சரமாரியாக தாக்கி உள்ளனர். சாமர்த்தியமாக திலகவேணி அந்த அறையில் இருந்து ரத்த கோலத்தில் தப்பித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அங்கு இருந்த போலீசார் புகாரை வாங்காமல் அமைந்தகரை காவல் நிலையத்தில் கொடு என்று திருப்பி அனுப்பி விட்டனர். பயந்து போன திலகவேணி இராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்பு, அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த அமைந்தகரை போலீசார்… குற்றவாளிகளை தேடி வந்த நிலையில்…. நேற்று இரவு கோயம்பேட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் உள்ளதாக அமைந்தகரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 5 பேரை கைது செய்தனர். பின்னர் விசாரணையில் சென்னை திரிசூலம் சேர்ந்த ஜகன் (31), மனோஜ்(33), சரத்(25), அருண்(29), மணி(26) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்…
நமது நிருபர்