Sat. Dec 21st, 2024

டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி வழிப்பறி ..

டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி வழிப்பறி..

ஜூன், 3-2019

தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரெங்கநாதபுரம் அருகே கடந்த 28ஆம் தேதி அன்று வழுத்தூர் டாஸ்மாக் கடையில் இருந்து மாதவன் என்பவர் டாஸ்மாக்கில் விற்பனை ஆனா பணம் 2 லட்சத்தி 38 ஆயிரம் ரூபாய்யை தனது இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றபோது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் மாதவன் முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவர்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் தாக்கிவிட்டு பணத்தை பறித்து சென்று விட்டனர்.

இது தொடர்பாக மாதவன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து உதவி ஆய்வாளர் கண்ணன் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைத்து தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி 24மணி நேரத்தில் மேலதிருப்பத்துருதி கீழத்திருப்பத்துருதியை சேர்ந்த சம்பத், மணி மற்றும் நரி (எ) அரவிந்த் என்ற மூன்று குற்றவாளிகளை கைது செய்தனர்.

குற்றவாளிகளிடம் இருந்து ரூ.218200/-, ஆயுதம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு அவர்கள் மூவரையும் சிறையில் அடைத்தனர்..

நிருபர் ராம்