டிராஃபிக் போலீசை தாக்கிய போதை ஆசாமி..
ஜீன் 2-2019
சென்னை, திருவான்மியூர் வால்மீகி தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (56). இவர் திருவான்மியூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு பிரிவு துணை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு இவர் திருவான்மியூர் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே உள்ள சிக்னலில் பணியில் இருந்தார், அப்போது தலைமை நீதிபதி வாகனம் ஒன்று வந்தது. இதற்காக சிக்னல் நிறுத்திவிட்டு தலைமை நீதிபதியின் வாகனத்தை அனுப்பினார், அப்பொழுது சிக்னலில் பைக்கில் நின்றிருந்த ஒரு வாலிபர் போதையில் நீதிபதி வாகனத்தை இடிப்பது போல் வந்து… துணை ஆய்வாளர் பன்னீர்செல்வம் அருகே வந்து நிறுத்தி… ஏன் சிக்னல் நிறுத்தினீர்கள்.? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இறுதியில் வாக்குவாதம் முற்றிப்போய்… பைக்கில் வந்த வாலிபர்.. குடிபோதையில் துணை ஆய்வாளரை சரமாரியாக தாக்கி தாக்கினார். இதில் அவரது சட்டை கிழிந்து கீழே விழுந்தார். பைக்கில் வந்த போதை ஆசாமி அங்கிருந்து தப்பினார். இதைப்பார்த்த பொதுமக்கள் துணை ஆய்வாளரை மீட்டு… அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். அங்கிருந்த இளைஞர்கள் சிலர் பைக்கில் அந்த போதை ஆசாமியை துரத்தி பிடித்து தர்ம்ம அடி அடித்து… அந்த வாலிபரை திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
திருவான்மியூர் போலீசார் அவனை விசாரணை நடத்தியதில்… அவன் மது போதையில் இருந்ததும் அவன் திருவான்மியூர் திருவீதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அஜய் (22) என தெரியவந்தது. இதனை அடுத்து அவனை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
நமது நிருபர்.