Fri. Dec 20th, 2024

சூர்யாவின் NGK படத்தின் டிக்கெட் அதிக விலைக்கு விற்பனை | தேவி தியேட்டர் உரிமையாளர் மீது புகார் |

ஜீன், 1-2019..,

தேவி திரையரங்கில் மேலாளர் உத்தரவுடன் அசல் டிக்கெட் விலையைவிட கூடுதல் விலையில் விற்பனை செய்ததாக புகார்.

மே 31- அன்று வெளியாகி..நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெற்றிகரமாக தமிழக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் NGK என்ற திரைப்படத்தை காண விஜயகுமார் என்பவர் சென்னையில் உள்ள தேவி தியேட்டருக்கு இன்று வந்துள்ளார்.

டிக்கெட் வாங்குவதற்கு கவுண்டரை அணுகிய போது விஜயகுமாருக்கு அதிர்ச்சி.! அசல் டிக்கெட்டின் விலையை கூடுதல் விலைக்கு நிர்ணயம் செய்து கவுண்டரிலேயே விற்று உள்ளனர். ஏன் என்று கேட்டதற்கு கவுண்டரில் அமர்ந்து இருந்த நபர் திரையரங்க மேலாளர் உத்தரவு அவரிடம் கேட்கவும் என விஜயகுமாரிடம் கூறியுள்ளனர்.

அதைத்தொடர்ந்து விஜயகுமார் திரையரங்க மேலாளரை தொடர்புகொண்டு கேட்டபோது…
அதற்கு அலட்சியமாக
நாங்க விற்பனை செய்யும் விலை தான் இது, இந்த திரையரங்க உரிமை அது..இதில் நீ தலையிடாதே, உனக்கு விருப்பம் இருந்தால் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படத்தை பார்த்து விட்டு செல்.. இல்லையென்றால் இடத்தை காலி செய் என தெரிவித்துள்ளார்.

விஜயகுமார் பிறகு திரையரங்க உரிமையாளரிடம் நியாயம் கேட்க போவதாக மேலாளரிடம் கூறியுள்ளார் அதற்கும் மேலாளர் அலட்சியமாக உரிமையாளரிடம் சென்று புகார் தெரிவித்தாலும் ஒன்றும் நடக்காது என்றார்… உடனே இது சம்மந்தமாக விஜயகுமார் திருவல்லிகேணி காவல் நிலையத்தில் தேவி திரையரங்க உரிமையாளர் மற்றும் மேலாளர் இருவர் மீதும் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

தேவி திரையரங்கம் குறித்து ரசிகர்களிடமே விசாரித்ததில் புதுபடங்கள் வெளியாகும் சமயத்தில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வதாக தெரிவிக்கின்றனர்.

நமது நிருபர்