MONEY – மங்கலமாக மாறிப் போன | C-3 மணிமங்கலம் காவல் நிலையம் |
மே, 31-2019…,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள C-3 மணிமங்கலம் காவல் நிலையத்தின் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தமிழ்செல்வன் மற்றும் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் இருவரும் இந்த காவல் நிலையத்தை கட்டப் பஞ்சாயத்து நிலையமாக நடத்தி வருவதாக… அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.
ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் இருவராலும் பாதிக்கப்பட்ட ரவி என்பவர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட உதவி கண்காணிப்பாளிடம் புகார் அளித்துள்ளார். படப்பையில் ரவி என்பவருக்கு சொந்தமான பூர்வீக சொத்தை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதற்கான நீதிமன்ற தீர்ப்பை முறையாக பெற்று அதிகாரிகள் முன்னிலையில் பாகப்பிரிவினை செய்யப்பட்டது.
அந்த நிலத்தில் வேலி அமைக்க ரவி சென்றபோது ரவியின் சகோதரர் குமார் என்பவர்… அவரது நண்பர்களான செந்தில் மற்றும் இளங்கோ ஆகியோருடன் சேர்ந்து சண்டை போட்டு வேலையை தடுத்துள்ளனர். உடனடியாக ரவி C-3 மணிமங்கலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் செந்தமிழ் செல்வனிடம் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட உதவி ஆய்வாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் எதிர் தரப்பினர் நீதிமன்ற தடை உத்தரவு வாங்க சென்றுள்ளதால் புகார் மனுவை கிடப்பில் போட்டுள்ளார். மீண்டும் ஏப்ரல் 29ம் தேதி நிலத்திற்கு வேலி அமைக்க சென்றவர்களை எதிர் தரப்பினர் மறுபடியும் தடுத்துள்ளனர்.
மீண்டும் காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். அதையும் பெற்றுக் கொண்ட உதவி ஆய்வாளர் செந்தமிழ்ச்செல்வன், ஆய்வாளருக்கும் தமக்கும் பணம் கேட்டதாகவும் ரவியும் எனது புகாரின் மீது நடவடிக்கை எடுங்கள் பிறகு பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்…
அதன்பின் மீண்டும் மே மாதம் 4 ஆம் தேதி காவல் நிலையம் சென்று… எதிர்தரப்பினர் எனது நிலத்தில் வைத்துள்ள சிமெண்ட் போஸ்டை நாசப்படுத்தி உள்ளனர்… அதன் மீது நடவடிக்கை எடுங்கள் அல்லது அதற்கு உண்டான செலவு ரூபாய் 42000, மதிப்புள்ள 42 சிமெண்ட் போஸ்டை வாங்கி தாருங்கள் என புகார் அளித்துள்ளார். ஆனால் உதவி ஆய்வாளர் விடுப்பில் சென்றுள்ளதாக காவல் நிலையத்தில் கூறியுள்ளனர்.
உடனே மே 14 ஆம் தேதி அன்று ஸ்ரீபெரும்புதூர் காவல்துறை உதவி கண்காணிப்பாளரை அணுகி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனு தொடர்பான விசாரணைக்கு… மே 25 அன்று மணிமங்கலம் காவல் நிலையம் சென்றுள்ளார் ரவி. அப்பொழுது இவர் அளித்த மூன்று புகார் மனுக்களும் வழக்கு கட்டில் இல்லை.
ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் அதனை தனியாக எடுத்து சுருட்டி மேஜை மேல் வைத்துள்ளதை கண்டு அதிர்ந்து கேட்டதற்கு எதிர் தரப்பினர் உடைத்து நாசப்படுத்திய சிமெண்ட் கம்பங்களுக்கு 42,000 வாங்கி தருகிறேன் எனக் கூறியுள்ளார், அதனை உண்மை என நம்பி மீண்டும் மறுநாள் ரவி போன் செய்கிறார்..
ஆய்வாளருக்கு முதல் நாள் போன் செய்கிறார் ரவியின் வழக்கறிஞர்… நீங்கள் போனை ரவியிடம் தாருங்கள் என கூறிய ஆய்வாளர் உனக்கும் பணம் தானே வேண்டும் நான் வாங்கி தருகிறேன் என்று கூறுகிறார்…மறுநாள் உனக்கும் பணம் எல்லாம் வாங்கித் தர முடியாது அது எனது வேலை இல்லை என்று கூறிய (ஆடியோ பதிவு நம்மிடம் உள்ளது )..
2018 உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்காமல் அந்த நிலத்தின் கடந்த 50 ஆண்டு கால பத்திரங்களை நான் முழுவதும் பார்த்த பிறகு தான் நடவடிக்கை எடுப்பேன் என கூறி எதிர் தரப்பினர் புகார் அளித்ததில்… சி.எஸ்.ஆர் தந்துவிட்டேன் உன்னால் முடிஞ்சதை செஞ்சுக்கோ என மிரட்டியுள்ளதாக எதிர் தரப்பினரிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு தான் எனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று நம்மிடம் தெரிவிக்கின்றார்.
பாதிக்கப்பட்ட ரவி தான் அளித்த புகாரின் மீது இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்காத மணிமங்கலம் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உதவி ஆய்வாளர் செந்தமிழ் செல்வன் இருவர் மீதும் உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கின்றனர்…
ச.விமலேஷ்வரன்
பத்திரிகையாளர்