உடலில் 305 கிராம் தங்கத்தை கடத்தியவர் | விமான நிலையத்தில் பறிமுதல் |
மே, 29-2019..,
திருச்சி விமான நிலையத்தில் கடந்த ஒரு மாத காலமாக தங்கம் கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருவதால்… சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் சுமார் 10-கிலோ மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்.
தங்கம் கடத்தி வருவதாக மத்திய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து… இன்று காலை கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்க துறையினர் சோதனை செய்தனர். இதில் சென்னையை சேர்ந்த ஷேக் அப்துல்லா (37) என்பவர் தனது உடலில் ரூபாய் 7.48 லட்சம் மதிப்புள்ள 305 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தியது தெரியவர இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
நமது நிருபர்