கிணற்றை தூர்வாரியபோது | விஷவாயு தாக்கி மூவர் பலி |
சென்னை பெருங்குடி அருகே உள்ள கல்லுகுட்டையில் சுபாஷ் சந்திரபோஸ் தெருவில் சந்தோஷ் என்பவரது வீடு உள்ளது. இங்கு தண்ணீர் பிரச்சனை காரணமாக இவரது வீட்டிலுள்ள கிணற்றை தூர்வார அந்த பகுதியை சேர்ந்த அன்பு, காளிதாஸ் ஆகியோர் கிணற்றில் இறங்கியுள்ளனர். அப்போது இருவரும் கிணற்றுக்கு உள்ளேயே மயங்கியுள்ளனர். உடனே வீட்டின் உரிமையாள சந்தோஷ் இருவரையும் காப்பாற்ற கிணற்றில் இறங்கியபோது அவரும் மயக்கம் அடைந்தனர். இதை அடுத்து கிணற்றினுள் மயங்கிய மூவரையும் காப்பாற்ற ராஜி,சேகர் ஆகிய இருவரும் கிணற்றில் இறங்கி விஷவாயுவின் தாக்கத்தால் உடனடியாக வெளியேறினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் விஷவாயு தாக்கி மயங்கியவர்களை மீட்டபோது அன்பு, சந்தோஷ், காளிதாஸ் ஆகிய 3- பேர் உயிரிழந்தது தெரியவந்ததும்.
கிணற்றில் மயங்கி விழுந்தவர்களை காப்பாற்ற முயன்ற ராஜி,சேகர் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தூர்வார முயன்ற கிணறு நீண்ட நாளாக பயன்பாட்டில் இல்லாததும் கிணற்றை சுற்றி அதிகளவில் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதும் விஷவாயுக்கான காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து துரைப்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்…
நமது நிருபர்