டாஸ்மாக் பார் ஊழியரிடம் | கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது |
பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் (28) இவர் கோயம்பேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக பணிபுரிந்து அங்கேயே தங்கி வருகிறார். நேற்று நள்ளிரவு பணி முடிந்து அப்பகுதியில் நடந்து செல்லும் போது அப்போது அந்த வழியாக வந்த கொளத்தூரை சேர்ந்த பிரபாகரன்(26) பாலமுருகனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு உள்ளார். பணம் தர மறுக்கவே திடீரென்று பிரபாகரன் பாலமுருகன் சட்டை பையிலிருந்து 700 ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு ஓட்டம் பிடித்தார். பயந்து போன பாலமுருகன் சத்தம் போட்டுக் கொண்டு அவரை பின் தொடர்ந்து ஓடினார்.
அருகில் இருந்த பொதுமக்கள் பிரபாகரனை மடக்கிப் பிடித்து சரமாரியாக தாக்கி கோயம்பேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிரபாகரனிடம் இருந்து பட்ட கத்தியை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து அவரை சிறையில் அடைத்தனர்…
நமது நிருபர்