Sat. Dec 21st, 2024

பட்டப்பகலில் ஆட்டோ ஓட்டுனர் வெட்டி கொலை |

மே, 25-2019..,

அரக்கோணம் பழனிப்பேட்டை ரயில் நிலையம் அருகில் பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் ஒருவரை, ஓட…ஓட… விரட்டி கொலை. சடலத்தை கைப்பற்றி நகர போலீசார் விசாரனை நடத்தியதில்… அரக்கோணம் பழனிப்பேட்டை டி.என்.நகரை சேர்ந்த சோமுவின் (71) மகன்… அன்பு என்கிற பரோட்டா (34) என தெரியவந்தது. இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். கடந்த 24ம் தேதி காலை சுமார் 11- மணியளவில் தனது ஆட்டோவில் பயணிகளை ஏற்றி வந்த அன்பு… அவர்களை பழனிப்பேட்டை இரட்டைக்கண் வராவதி அருகில் ரயில் நிலையம் செல்ல இறக்கி விட்ட பின்.. நான்கு பேர் கொண்ட கும்பல், ஓட்டுனர் அன்புவை பயங்கர ஆயுதங்களுடன் விரட்டியுள்ளனர்.. இதில் பயந்துபோய் அருகில் இருந்த இருசக்கர வாகன நிறுத்தும் இடத்திற்குள் சென்றுள்ளார். பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற மர்ம நபர்கள்… சரமாரியாக தலை, கழுத்து மார்பு உள்ளிட்ட பகுதிகளில் வெட்டி உயிர் பிரிந்த பின்… ரயில் நிலைய நடைமேடை வழியாக தப்பித்ததாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த DSP.விஜயகுமார் மற்றும் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா? என்ற கோணத்தில் விசாரனை நடத்தி வருகின்றனர்கள்.

இறந்த அன்பு மீது ஏற்கனவே இரண்டு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அன்புவின் தாய் மற்றும் சகோதரி ஆகியோரும் தனித்தனியாக கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் கொலை செய்யப்பட்டனர். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இடத்தில் இந்த கொலை நடந்து இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருவதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்…

நமது நிருபர்