திருத்தணி கோயிலில் 30-நாட்களில் | 67-லட்சம் காணிக்கை செலுத்திய பக்தர்கள் |
முருகன் கோயிலில் 30-நாட்களில் | 67-லட்சம் காணிக்கை செலுத்திய பக்தர்கள் |
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை வீடாகும் இந்த திருத்தலத்தில் தினமும் ஆந்திரா, கர்நாடகா மாநிலம் போன்ற தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகின்றனர் தற்போது கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் உண்டியலில் காணிக்கைகளாக பணமாகவும் நகையாகும் செலுத்துகின்றனர் இதேபோல் தரிசன டிக்கெட் ஆகியவை கடந்த 30 நாட்களில் செலுத்தப்பட்ட தொகையினை திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் இன்று மலைக்கோயில் அருகே உள்ள தேவர் மண்டபத்தில் வைத்து எண்ணும் பணி நடைபெற்றது. இதில் கோயில் ஊழியர்களும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் என பல்வேறு தரப்பினர் உண்டியல் பணம் எண்ணும் பணி முருகன் கோயில் தக்கார் ஜெய்சங்கர் முன்னிலையில் நடைபெற்றது எண்ணும் பணி முடிக்கப்பட்டு இன்று கோயில் நிர்வாகம் அறிவித்த விவரம் பணமாக ரூ.67,16,220 ஆகும், தங்கம்-618,கிராம். வெள்ளி-12020 கிராம்,, இவைகளை எல்லாம் பக்தர்கள் 30 நாட்களில் செலுத்திய பணம் மற்றும் தங்கம் என்று திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது…