Sun. Oct 6th, 2024

பொது இ-சேவை மையம் | மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதி |

மே, 22-2019….,

நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டை நகராட்சியின் புதிய கட்டிடம் கடந்த 2015ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உத்தரவின் பேரில்… பொது இ-சேவை மையம் தமிழகம் முழுவதும் துவங்கப்பட்டது. இது பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

புதுக்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் இயங்கிக் கொண்டு இருந்தது. நகரப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படும் வகையில் இந்த மையம் செயல்பட்டு வந்த நிலையில்… தற்போது பத்து நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.
அந்த அறையும் எப்போதும் பூட்டிக் கிடக்கிறது. வருகிற ஜூன் ஜூலையில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில்… இருப்பிடச் சான்றிதழ், சாதி சான்றிதழ் மற்றும் பிறப்பு, இறப்பு சான்றிதழில் பதிவு செய்ய ஏராளமான பொது மக்கள் வருவார்கள். ஆனால் பொது இ-சேவை மையம் பூட்டி கிடப்பதை பார்த்து திரும்பி செல்கின்றனர். நகராட்சிக்கு வருபவர்களை கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கின்றனர். இங்கு செயல்பட்ட பொது இ-சேவை மையம்… தற்போது
25 கிலோ மீட்டருக்கு தொலைவில் குளத்தூர் தாலுகாவில் இயங்கி வருவதாக நகராட்சி அலுவலகத்தினர் கூறி வருகின்றனர்..

பொது இ-சேவை மையம் தொடர்ந்து செயல்பட முயற்சிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நமது நிருபர்