Sat. Mar 15th, 2025

அண்ணாநகரை கலக்கிய | முகமூடி கொள்ளையர்கள் மூவர் கைது |

மே, 21-2019

220 டாலர்கள் உட்பட இருசக்கர வாகனம் பறிமுதல். அண்ணா நகர் Q – பிளாக்கை சேர்ந்தவர் சுரேஷ் (40). இவர் சென்னை உயிர் நீதிமன்ற வழக்கறிஞர். கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அன்று இவரது வீட்டில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள்… பீரோ லாக்கரை உடைத்து 40,000 ஆயிரம் மற்றும் 30 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு டாலர்களை கொள்ளை அடித்து சென்றனர். இது குறித்து வழக்கறிஞர் சுரேஷ் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடிவந்த நிலையில்.. நேற்று அண்ணாநகர் சிந்தாமணி சிக்னல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் மூன்று வாலிபர்கள் வந்தனர். அவர்களை மடக்கி விசாரணை செய்ததில்… அண்ணா நகரை கலக்கிய வழிப்பறி முகமூடி கும்பல் என்பது தெரியவந்தது.

இவர்களை கைது செய்து விசாரணை செய்ததில் விருகம்பாக்கம் லட்சுமி நகர் 3வது தெருவை சேர்ந்த சூர்யா (எ) கொசுரு சூர்யா (19), இவருடைய கூட்டாளி விருகம்பாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சக்திவேல் (19) , விருகம்பாக்கம் 1வது குறுக்கு தெருவை சேர்ந்த நேசமணி (20) ஆகியோர் என்பதும்… இவர்களிடம் இருந்து 220- வெளிநாட்டு டாலர்கள் வழிப்பறிக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர். மேலும் சூர்யா மீது2017ல் அண்ணாநகர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது ஜ் குறிப்பிடத்தக்கது..

நமது நிருபர்