Fri. Mar 14th, 2025

வீட்டில் தனியாக இருந்த ஆட்டோ ஓட்டுனருக்கு சரமாரியாக வெட்டு…!

மே, 21-2019

முன் விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுனருக்கு வெட்டு. மயக்க நிலையில் ஆட்டோ ஓட்டுநர் அரசு மருத்துவமனையில் அனுமதி…!

அமைத்தகரையில் வசித்து வரும் ஆட்டோ ஒட்டுனர் சுந்தர் (40). இவருடைய மனைவி குழந்தைகள் விழுப்புரம் சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த சுந்தரை 20ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணி அளவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள்… சுந்தர் தலை, நெற்றி, கை, கால் என சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். வலியால் துடித்த சுந்தரை அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணி… வரவைத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைக்கு சென்ற சுந்தருக்கு தீவிர சிகிச்சை செய்து வருகின்றனர். வழக்கு பதிவு செய்த அமைந்தகரை போலீசார்… முன் விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுனர் சுந்தர் என்பவரை வெட்டிருக்கலாம் என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

நமது நிருபர்