பேராண்மை செய்தி எதிரொலி:|போலீஸ் அதிகாரிகள் அதிரடி ஆக்ஷன் |
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை மற்றும் சிசிடிவி கேமிராக்களை கூடுதல் கமிஷ்னர் தினகரன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து வருகின்றனர். மேலும் வேலை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். அதன் காரணமாக இந்த பஸ் நிலையம் 24 மணி நேரமும் பரப்பரப்பாக காணப்படும். கடந்த 2008ம் ஆண்டு இந்த பஸ் நிலையம் திறக்கப்பட்டது. அப்போது பயணிகளின் பாதுகாப்பை கருதி போக்குவரத்து துறை சார்பில் இணையத்தில் 65 கேமிராக்கள் பொருத்தப் பட்டது. பின்பு அந்த கேமிராக்கள் பராமரிப்பு இல்லாத காரணத்தால், செயல்படாமல் கேமிராக்களாக காட்சிப் பொருளாக மட்டுமே இருந்து வந்தது…
இதனை நன்கு அறிந்து கொண்ட கொள்ளையர்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் தங்கள் கைவரிசையை காட்ட தொடங்கினர். ஒரு சம்பவும நிகழ்ந்தால் அந்த இடத்தில் கேமிரா உள்ளதா? என போலீசார் முதலில் கேட்கப்படும் கேள்வியாகும்?தற்போது குற்றங்களை தடுக்கவும் கொள்ளையர்களை பிடிக்கவும் கண்காணிப்பு கேமிரா முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதன் காரணமாகவே சென்னை போலீஸ் கமிஷனர் அவர்கள் மூன்றாவது கண் என பெயரிட்டு கண்காணிப்பு கேமிராக்களை சென்னையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு இடங்களில் வைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இக்கேமிராவின் மூலம் விளக்க முடியாத பல்வேறு வழக்குகளும் துப்பு துலங்கியது உண்மை. ஆனால், கோயம்பேடு பஸ் நிலையத்தில் விழுந்திருந்த கவனத்தை திசை திருப்பி பணம், நகை கொள்ளை அடிப்பவர்கள் முயன்று வெற்றியும. அடைந்துள்ளனர்.
பயணிகளிடம் போலீஸ் என கூறி நகை மற்றும் பணம் கொள்ளை அடிப்பது உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் வாரத்திற்கு நான்கு குற்றச் சம்பவங்களுக்கு மேல் நடைபெற்றது. இதுவரையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஒரு குற்றவாளியை கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்பது மிகுந்த வருத்தம் தரக்கூடிய செய்தியாகும்.
புகார்கள் குவிந்தாலும் கொள்ளையர்களை பிடிக்க முடியாத காரணம் அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்கள் செயல்படாததே என்று கூறப்படுகிறது.
இதனை நன்கு அறிந்து கொண்டு தான் கொள்ளையர்கள் அடிக்கடி கோயம்பேடு பஸ் நிலையத்தில் தங்களின் கைவரிசையை காட்டி விட்டு சென்று விடுகின்றனர். மேலும் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் குறைந்த எண்ணிக்கை கொண்ட போலீசார் இருப்பதால் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. போக்குவரத்து துறையிடம் செயல்படாத இந்த கேமிராக்களை செயல்பட வைக்கும் படி பலர் தெரிவித்தும் கூடுதலாக சில இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களை வைக்க வேண்டும் என மக்கள் தெரிவித்தும் வருகின்றனர். ஆனால், போக்குவரத்து துறை இதை சற்றும் காதில் வாங்கி கொள்ள வில்லை என்றே குற்றம் சாட்டப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நகை வியாபாரிகள் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க வளையல்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். தொடர்ந்து நகை பணம் உள்ளிட்ட பொருட்கள் அடிக்கடி கொள்ளை போகுவதால் ஒரு சில புகார்கள் மட்டுமே போலீசார் பதிவு செய்கின்றனர். புகார்களை செய்யாமலும் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவும் விரும்புகின்றனர். இதன் காரணமாக கோயம்பேடு போலீசார் தங்கள் பகுதியில் குற்றச்சம்பவங்கள் குறைவாக நடப்பதாகவே கணக்கு காட்டி வருகின்றனர். எனவே மூன்றாவது கண் எனப்படும் கண்காணிப்பு கேமராவை அமைக்க வேண்டும் என கோரிக்கை தற்போது எழுந்துள்ளது என கடந்த 18 ஆம் தேதி பேராண்மை செய்தி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து இன்று காலை சுமார் 10.30 மணியளவில் கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷ்னர் விஜயகுமாரி , துணை ஆணையர் டாக்டர் சுதாகர், உதவி கமிஷ்னர் ஜெயராமன் ஆகியோர் திடீர் என்று கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமிராக்கள் செயல்படுகிறதா? என ஆய்வு செய்தனர். மேலும் தினந்தோறும் வழிப்பறி கொள்ளை சம்பவமாக வழக்குகள் எத்தனை பதிவாவது என்பதை ஆய்வு செய்தனர்.
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் திடீரென்று கூடுதல் கமிஷனர் தினகரன் ஆய்வு செய்ய வந்ததால் போலீஸ் மத்தியில் பரபரப்பு காணப்பட்டது…
நமது நிருபர்