Sun. Oct 6th, 2024

புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரை காசு | பக்தியை பணமாக்கும் குடைவரைக் கோயில் |

மே, 19-2019…,

பக்தியை பணமாக்குகிறார்களா? என பொதுமக்கள் குற்றச்சாட்டு.!

அனுமதிச் சீட்டு முதல் அர்ச்சனை சீட்டு வரை குளறுபடி செய்யும் குடைவரைக் கோவில் நிர்வாகத்தினர்.! கோவில் பணம் அதிக அளவில் சுரண்டலா.? பகீர் குற்றச்சாட்டால் பரபரக்கும் பிரகதாம்பாள் ஆலய முக்கிய ஊழியர்கள்…!!!

புதுக்கோட்டை நகருக்கு அருகே அமைந்துள்ள திருக்கோகர்ணத்தில் பழமை வாய்ந்த ஆலயம் அமைந்துள்ளது.மூலவர் ஸ்ரீகோகர்ணேஸ்வரர், அம்பாள் பிரகதாம்பாள் ஆவார். பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் பிரகதாம்பாளின் சாந்நித்தியத்தை உணர்ந்த புதுக்கோட்டை மக்கள், தங்கள் பெண் குழந்தைக்கு பிரகதாம்பாள் என்று பெயர் வைப்பது வழக்கம். மேலும் பிரகதாம்பாளின் திருவுருவத்தை, தொண்டைமான் மகாராஜா காலத்திலேயே நாணயத்தில் பொறித்து அம்மன் காசினை வெளியிட்டு உள்ளனர்.இத்தனை பெருமை வாய்ந்த திருக்கோகர்ணம் ஆலயத்தில் நாள்தோறும் எண்ணற்ற பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.. தவிர தரிசனம் செய்வதோடு மட்டுமல்லாமல், திருக்கோவில் பிரசாதமாக…கோவில் பிரசாதம் மற்றும் அம்மனின் அரை காசுகளை வாங்கி செல்கிறார்கள்.

அவ்வாறு வாங்கி செல்லும் பக்தர் நம்மிடைய பேசுகையில்…பழம் பெருமை வாய்ந்த இத்திருக்கோவில் பாரம்பரியத்தை ஊழியர்கள் கெடுத்து வருகிறார்கள். ஏனென்றால் அம்மன் காசு முன்பு கையால் அச்சடித்து வழங்கப்பட்டது .பின்பு அச்சகச் சாலையில் அச்சடித்து வழங்கப்படுகிறது.
ஒவ்வொருவரும் இறை நம்பிக்கையில் செம்பிலாலான அம்மன் காசினை பயபக்தியுடன் வாங்கி செல்கிறார்கள். ஆனால் பக்தியை பணமாக்கும் கோவில் ஊழியர்கள் அம்மன் காசினை 50 ரூபாய்க்கு விற்கிறார்கள். அதற்கான ரசீதை கேட்டால்… கொடுக்க மறுக்கிறார்கள்..!என்றனர் இந்த விவரங்களை அறிந்த நாம் ஒரு நாள் முழுவதும் அந்த கோவிலை சுற்றி வந்தோம் நாமும் சில பூஜைகளையும் செய்து அரை காசுகளை வாங்கினோம் ஆனால் அவர்கள் கூறியதுபோல எந்தவித ரசீதையும் நிர்வாகம் தரவில்லை கோயில் பணி புரிபவர்களிடம் கேட்கும்போது அவர்கள் கோயிலில் நடக்கும் சில ஊழல் குற்றச்சாட்டுகள் உண்மை தான் என்பதை உறுதிபடுத்திக் கொண்டோம்…

கோவிலின் செயல் அலுவலர் திரு.பாண்டியராஜூ மற்றும் ஆலைய மேற்ப்பார்வையாளர் திரு.மாரிமுத்து ஆகிய இருவரும் பின்புலமாக இருக்கலாம் என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனை அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ் அவர்கள் தீர விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்…

மேலும் செம்பு உலோகத்தாலான சிறிய அம்மன் காசினை தனியாக இவர்களே எடுத்து நடத்துகிறார்களா? அல்லது அதற்கு முறையான கணக்கினை அறநிலையத் துறையிடம் சமர்பிக்கின்றனரா? என்பதை பற்றி ஊர்மக்களின் கையெழுத்துடன் எவ்வளவு அம்மன் காசுகள் அச்சடிக்கப்படுகின்றன.? ஆலய நிர்வாகம் சரியாக நடைபெறுகிறதா ? என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்… இந்து அறநிலைத் துறை ஆணையர் அவர்களுக்கு புகார் அனுப்பியுள்ளனர்.

ச.விமலேஷ்வரன்
பத்திரிகையாளர்