பஸ் நிலையம் அருகே வலிப்பு வந்து | இறந்த ஆட்டோ டிரைவர் |

மே, 19-2019…,
கோயம்பேடு பஸ் நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுனர் வலிப்பு நோயால் உயிரிழந்தார்.
சென்னை, அரும்பாக்கம் ராணி அண்ணாநகர் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அழகப்பன் (44). இவர் நேற்று 8:30 மணி அளவில் கோயம்பேடு பஸ் நிலையம் அருகில் சவாரிக்காக நின்று கொண்டிருந்தார்.
தீடீர் என்று அழகப்பன் வலிப்பு வந்து துடித்தார் உடனே அருகிலிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் உடனே 108 வாகனத்தை வர வைத்தனர். அங்கு
வந்த மருத்துவர் பரிசோதித்து பார்த்து அழகப்பன் இறந்து விட்டதாக கூற உடனே அருகில் உள்ள கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த கோயம்பேடு போலீசார் உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்…
நமது நிருபர்