பூட்டை உடைத்து செல்போன் கடையில் |40 கைபேசிகள் உட்பட 97-ஆயிரம் கொள்ளை |

மே, 18-2019…,
வில்லிவாக்கத்தில் செல்போன் கடையில் ஷட்டரின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள 40 செல்போன்கள் மற்றும் ரூ 97 ரொக்கப் பணம் கொள்ளை.
அண்ணாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்த முகமது முஸ்தபா, வில்லிவாக்கம் பாட்டை சாலையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு கடையை பூட்டி சென்றவர், இன்று காலை வந்து பார்த்த போதும், கடையில் ஷட்டரின் பூட்டை உடைத்து, அதில் இருந்து 6 லட்சம் மதிப்புள்ள 40 செல்போன்கள் மற்றும் 97 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப் பட்டது தெரிந்தது. கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் மர்ம நபர்கள் உடைத்து அள்ளி சென்றனர். இந்த சம்பவம் குறித்து முஸ்தபா ஐசிஎப் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார். வழக்கு பதிவு செய்த ஐசிஎப் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மேலும் தொடர்ச்சியாக வில்லிவாக்கம்,
ஐசிஎப் பகுதிகளில் கொள்ளைகள் அதிகமாக நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்…
நமது நிருபர்