Sat. Mar 15th, 2025

குப்பைத்தொட்டி காலியா தான் இருக்கு! குப்பைகள்தான் ரோட்டில கிடக்குது!

மே, 15-2019…,

சென்னை திருவல்லிக்கேணி மெயின் ரோட்டில் உள்ள தபால் நிலையம் பஸ் நிறுத்தம் அருகில்… குப்பைத் தொட்டி உள்ளது. இந்த குப்பை தொட்டி குப்பைகள் இல்லாமல் காலியாகத்தான் இருக்குது. ஆனால் பொதுமக்கள் யாரும் குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடாமல் கீழே தான் போடுகின்றனர். இதனால் குப்பைகள் ரோடு வரை பரவிக் கிடக்கிறது. பாதசாரிகள் அதை மிதித்து தான் கடந்து போக வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு அல்லாமல் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதை மாநகராட்சி ஊழியர்கள் சரி செய்வார்களா? இது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

தவிர… இனியாவது பொதுமக்கள் குப்பையை குப்பைத்தொட்டியில் போடவேண்டும் என்பது… அவர்களின் ஆசை..

நமது நிருபர்