Fri. Mar 14th, 2025

மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்குச் “சிறப்பு அங்கீகார விருது”

மே, 15-2019…,

நியூஸ் 7 தமிழ்த் தொலைக்காட்சி சார்பில் மருத்துவத்துறையில் சாதனைகள் புரிந்த மருத்துவர்களைக் கௌரவிக்கும் விதமாக “நலம் விருதுகள்” வழங்கும் விழா சென்னையில் உள்ள தாஜ் கொரமண்டல் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவத் துறையில் சாதனை புரிந்தவர்களுக்குப் பல்வேறு பிரிவுகளின்கீழ் 25 விருதுகள் வழங்கப்பட்டன.

ஆரம்பச் சுகாதார நிலையம் தொடங்கி… பெரும் மருத்துவ நிறுவனங்கள் வரை அவர்களது மருத்துவச் சேவைகளைப் பாராட்டி “நலம் விருதுகள்” வழங்கப்பட்டன. மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனைக்குச் “சிறப்பு அங்கீகார விருது” வழங்கப்பட்டது. வேலம்மாள் கல்விக் குழுமத்தின் தலைவர் திரு. எம்.வி.முத்துராமலிங்கம் அவர்கள் சார்பாக, தலைமைச் செயலாக்க அதிகாரி திரு.எம்.வி.எம்.வேல்முருகன் அவர்கள் இவ்வுயரிய விருதினைப் பெற்றுக் கொண்டார்.

நமது நிருபர்