Sat. Dec 21st, 2024

காலாவதியான 5000 குடிநீர் கேன்கள் |பறிமுதல் செய்த அதிகாரிகள் |

காலாவதியான தண்ணீர் கேன்கள் | வீடுகளுக்கு விற்பனை |

சென்னையில் காலாவதியான தண்ணீர் கேன்கள் சப்ளை செய்வதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல். உணவுத்துறை அதிகாரிகள் இன்று காலை 8.00 மணி அளவில் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே நின்று கொண்டு இருக்கும் போது அந்த வழியாக மினி வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர்.தண்ணீர் கேன்கள் அனைத்தும் சென்னை புறநகர் பகுதிகளான திருவள்ளூர், பூந்தமல்லி, திருவேற்காடு, வானகரம் ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டுவப்பட்டது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதாசிவம் தலைமையில் மூன்று பேர் கொண்ட அதிகாரிகள் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே இன்று காலை தண்ணீர் கேன் சோதனையில் ஈடுபட்டனர். மினி வேன்களில் கொண்டு வரப்பட்ட தண்ணீர் கேன்களை சோதனை செய்தனர்.

சோதனை செய்யப்பட்ட 5000 கேன்கள் காலாவதி மற்றும் தரமற்ற தண்ணீர் கேன்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் தண்ணீர் கேன்களில் போலியான தண்ணீர் நிறுவன லேபிள்கள் ஒட்டப்பட்டிருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உணவு பாதுகாப்பு துறை விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மேலும் இதே போல் கடந்த 8ம் தேதி அன்று கோயம்பேடு ரோகினி திரையரங்கம் அருகில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் காலாவதியான சுமார் 5000 கேன்கள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது…

நமது நிருபர்