திருட்டு பைக்கில் |ஆட்டோ ஓட்டுனரிடம் திருடிய வாலிபரை பிடித்த போலீசார் |
மே, 14-2019..,
சென்னை திருமங்கலம் பகுதியில் ஆட்டோ ஓட்டுனரிடம் செல்போன் மற்றும் பணம் பறித்து ஓடிய வாலிபரை போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்தனர். இவரிடமிருந்து ஒரு பட்டகத்தி இருசக்கர வாகனம் பறிமுதல்.
சென்னை, திருமங்கலம் பெரியார் நகர், பாடிகுப்பத்தைச் சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் மணிகண்டன் (28). இவர் இன்று காலை 9 மணி அளவில் திருமங்கலம் பகுதியில் சவாரிக்காக ஆட்டோ அருகே நின்று கொண்டிருந்தார்.
அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஆட்டோ ஓட்டுனர் மணிகண்டனை மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பிடிங்கி இரு சக்கர வாகனத்தில் பறந்தனர். ஆட்டோ ஓட்டுனர் மணிகண்டன் திருடன்… திருடன் என்று சத்தம் போட்டுகொண்டு இருசக்கர வாகனம் பின்னே ஓடினார். அதைத்தொடர்ந்து திருமங்கலம் சிக்னல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார் இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். பின்பு அவரிடம் விசாரணை செய்ததில்… அவர் வைத்திருந்த இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என தெரியவந்தது.
இவரிடமிருந்து ஒரு பட்டகத்தி இருந்தது தெரியவந்தது. உடனே திருமங்கலம் குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்ததில் திருவள்ளூர் மாவட்டம் பாண்டு பாப்பார்த்தி தெருவை சேர்ந்த மகேஷ்குமார் (19) என்பது தெரிய வந்தது.
இவர் வைத்து இருந்த இருசக்கர வாகனம் திருமங்கலம் பகுதியில்… ஒரு ஓட்டல் வெளியே நின்று கொண்டிருந்த வாகனத்தை திருடியது என்று ஒப்புக்கொண்டார். மேலும் இவரிடம் திருமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
நமது நிருபர்