Sat. Dec 21st, 2024

தந்தை திட்டியதால் வீட்டை விட்டு சென்ற | அண்ணன், தம்பியை மீட்ட போலீசார் |

மே, 14-2019…,

பெற்றோர் திட்டியதால் காணாமல் போன பள்ளி மாணவர்களை ஜெ.ஜெ.நகர் போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை, முகப்பேர் கிழக்கு ஜானகி கார்டன் சர்ச்ரோடைச் சேர்ந்த செந்தில்குமார் (43). இவர் தானியார் கம்பனியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரு பெண் இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகள் ரஷ்யாவில் படித்து வருகிறார்.
மகன் சந்தோஷ்(எ) பழனியப்பன் (16)… +1 படித்து வருகிறார். இரண்டாவது மகன் சஞ்சய் சரவணன் (14)… 10வது படித்து வருகிறார்.

சரியாக படிக்க வில்லை என்று கடந்த 10ம் தேதி அன்று செந்தில்குமார் இரண்டு மகன்களை திட்டி உள்ளார். அப்பா திட்டியதால் மனமுடைந்த அண்ணன் சந்தோஷ் மற்றும் தம்பி சஞ்ஜய் இருவரும் செந்தில்குமாரின் ஏ.டி.எம் கார்டை எடுத்து கொண்டு வீட்டில் இருந்த இரு சக்கர வாகனத்தோடு தலைமறைவாகி விட்டனர்.

எங்கு தேடியும் இரு மகன்கள் வீடு திரும்பவில்லை என்று செந்தில்குமார் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்து ஆய்வாளர் சுரேந்திரன் தலைமையில் தேடி வந்த நிலையில் புதுக்கோட்டையில் உறவினர் வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில்… இரண்டு பள்ளி மாணவர்களையும் பத்திரமாக மீட்டு, இன்று மதியம் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்திற்கு… மாணவர்களின் தந்தை செந்தில் குமாரை வரவழைத்து ஒப்படைத்தனர்.

தன்னுடைய மகன்களை பத்திரமாக மீட்டு கொடுத்த ஆய்வாளருக்கு கண்ணீருடன் செந்தில்குமார் நன்றி தெரிவித்தார்…

நமது நிருபர்