Sun. Dec 22nd, 2024

உருளைக்கிழங்கு மூட்டை சரிந்து… கூலித் தொழிலாளி பலி…!

மே, 13-2019…,

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் போது அடுக்கி வைக்கப்பட்டிருந்த உருளைக்கிழங்கு மூட்டைகள் சரிந்து விழுந்து கூலி தொழிலாளிக்கு பலத்த அடி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த கூலித்தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலி.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துச்சாமி(56). இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் சுமார் 10 வருமாக… தங்கி மூட்டை தூக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த 10ஆம் தேதி இரவு கோயம்பேடு மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு மூட்டையை தூக்கும்போது அடுக்கி வைக்கப்பட்டிருந்த உருளைக்கிழங்கு மூட்டைகள் சரிந்து முத்துச்சாமி மீது விழுந்தது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த சக ஊழியர்கள் முத்துசாமியை மீட்டு… சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த கூலி தொழிலாளி முத்துசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

நமது நிருபர்…