Sat. Dec 21st, 2024

தொழிலதிபரின் பண்ணை வீட்டில் | நவீனரக துப்பாக்கிகள்? | பயங்கர ஆயுதங்கள் பிடிபட்டது |

மே, 10-2019..,

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டல் களம் பகுதியை சேர்ந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேனி மாவட்ட செயலாளர் கௌரி மோகன்தாஸ்.

இவர் அங்கு விவசாய பண்ணை அமைத்து அங்கு தங்கியுள்ளார். அந்தப் பண்ணையில் 10க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி கொள்ளையடிக்க திட்டம்போட்டியில் திட்டுவதாக கிடைத்த ரகசிய தகவல்…. போடி தாலுகா காவல் நிலையத்துக்கு கிடைத்தது.

அதில் கடந்த வருடம் போடிமெட்டு அருகே உள்ள மணப்பட்டு கிராமத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கில் கொலை குற்றவாளி எஸ்டேட் மணியின் கூட்டாளி நீதி சரவணன் இருப்பதாக தகவல் அறிந்த காவல்துறையினர் அவரையும் அவர் சார்ந்தவர்களின் கைது செய்வதற்காக கௌரி மோகன்தாஸ் பண்ணை வீட்டுக்கு சென்றனர்.

அப்பொழுது அங்கு கொள்ளையடிப்பதற்காக திட்டம் தீட்டி கொண்டிருந்தவர்கள்… போலீசை கண்டதும் தப்பி ஓடினர். அதைத்தொடர்ந்து அங்கிருந்த அழகுராஜாவை
கைது செய்து… பண்ணை வீட்டில் சோதனை செய்த பொழுது இரண்டு சூட்கேஸ்களில்… 5 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 2 டபுள் பேரல் துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், 10 செல்போன்கள் மற்றும் அரிவாள், பட்டாக்கத்தி, அயல்நாட்டு கை வால்களை கைப்பற்றி, பண்ணையின் உரிமையாளர் கௌரி மோகன்தாஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் காவல்துறை ஆயுதக்கிடங்கு துணை ஆய்வாளர் பெண்ணாமலை அவர்கள் ஆய்வு செய்ததில்… அனைத்து துப்பாக்கிகளும் போலியானவை என்று தெரிய வந்தது. இதையடுத்து குற்றவாளி கௌரி மோகன்தாஸ் எதற்காக இந்த டம்மி துப்பாக்கிகளையும் ஆயுதங்களையும் பயன்படுத்துவதற்காக வைத்துள்ளார் என்பதை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தப்பியோடிய மற்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்வதற்காக தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். போடி அருகே பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப் பட்ட செய்தியை அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.