அண்ணா நகர் பஸ் டிப்போவில் | ஓட்டுனர் மாரடைப்பால் மரணம் |
அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினார் சென்னை ஜெஜெ.நகர் சத்தியா நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்த உமாபதி/ 52 இவருக்கு ஒரே மகன் கல்லூரியில் படித்து வருகிறார். மாநகரப் பேருந்து ஓட்டுனர் உமாபதி இன்று அதிகாலை 3 மணி அளவில் அண்ணா நகர் பஸ் டிப்போவில் பயணிகளை ஏற்றி பஸ்சில் பயணம் செய்யும் முன்பு உமாபதிக்கு திடீரென்று நெஞ்சுவலி வந்ததால் வலியால் துடித்த அவர் சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார் இதை கண்ட பஸ்சில் பயணம் செய்ய இருந்த பொதுமக்கள் சத்தம் போடவே அருகில் இருந்த ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் உடனே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உமாபதியை அழைத்து சென்றனர் ஒட்டுனர் உமாபதிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் இவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினார்.இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்…
நமது நிருபர்