Sat. Dec 21st, 2024

வழிப்பறி கொள்ளையர்களை அதிரடியாக கைது செய்த போலீசாருக்கு பாராட்டு…

மே, 08-2019…,

சேலம் மாநகர அன்னதானப்பட்டி காவல் சரகம் பட்டர்பிளை பாலம் அருகே… திரு. அழகுவேல் என்பரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி.. இருசக்கர வாகனம், செல்போன் மற்றும் ரூபாய் 1100 ஆகியவற்றை பிடிங்கிக் கொண்டதாக… காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திரு.B.குமார் அவர்கள் வழக்குப்பதிவு செய்து… மேற்கொண்டு விசாரணையில் SI.திரு. சத்திய மூர்த்தி, SSI திரு. சம்பத், SSI திரு. அன்பழகன், HC திரு. செந்தில்குமார், HC திரு.விஜயகுமார், HC திரு. கண்ணன், HC திரு. முருகேசன் மற்றும் முதல் நிலைக் காவலர் திரு.வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர்… கடந்த 7 ஆம் தேதி வழிப்பறியில் ஈடுபட்ட ஜான்சன் பேட்டையை சேர்ந்த அஜித் (எ) அஜித்குமார், இளையா (எ) இளையதளபதி, விவேக் (எ) விவேக் குமார், மற்றும் பிரசாந்த் (எ) ராம்கி ஆகிய நான்கு பேரை கைது செய்து… பறிக்கப்பட்ட பணம் ரூபாய் 1100, செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை மீட்டு குற்றவாளிகளை சேலம் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த வழக்கில் துரிதமாக புலன் விசாரணை மேற்கொண்ட அன்னதானப்பட்டி போலீசாரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்.

நமது நிருபர்.