போலி ATM கார்டு தயாரித்த பல்கேரியா நாட்டு வாலிபர் கைது..
மே, 08-2019..,
சென்னை சோழிங்கநல்லூர் ராஜீவ்காந்தி சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் வெளிநாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் தங்கியிருப்பதாக சென்னை குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீசார் அந்த வாலிபரை, தங்கியிருந்த அறையில் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த வாலிபர் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த வெளிகேவ் (29) என்றும், போலியான ஏ.டி.எம் கார்டுகளை தயாரித்து… அதை ஏ.டி.எம் மையத்தில் ஸ்வைப் செய்து பணம் எடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவனை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். அந்த வாலிபரிடம் இருந்து 45 போலி ஏ.டி.எம் கார்டுகள், 10 லட்சம் ரொக்கப் பணம், ஏ.டி.எம் கார்டு தயாரிக்கும் இயந்திரம், இரண்டு விலை குறைந்த லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன…
நமது நிருபர்