Sat. Dec 21st, 2024

திருச்சியில் கொலை செய்யப்பட்ட இளைஞர் | அமமுக கட்சியின் பிரமுகரா? |

திருச்சி பொன்மலை மேல கல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் காதர் உசேன் என்பவரின் மகன் ஜாவித் உசேன்/24 காதர் உசேன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர் இவருக்கு விரைவில் அமமுகவில் சிறுபான்மையினர் பிரிவில் பதவி வழங்க இருப்பதாக தெரிகிறது.

ஜாவித் உசேன் மே,7ம் தேதி மாலை 5 மணியளவில் மேலகல்கண்டார் கோட்டை கடைவீதிக்கு வந்தார். அப்போது மூன்று பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவரை விரட்டியது. இதையடுத்து ஜாவித் உசேன் தப்பிக்க ஓடி அருகில் இருந்த ஆவின் பால் பூத்துக்குள் புகுந்தார். துரத்தி வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் பால் பூத்துக்குள் சென்று அவரை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த பொன்மலை போலீசார் அங்கு சென்று ஜாவித் உசேனின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அவரது கொலைக்கு முன்விரோதம் காரணமா? காதல் பிரச்சனையா என பல்வேறு கோணங்களில் பொன்மலை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்…

நமது நிருபர்